உத்தரமேரூர் அருகில் கணவன் -மனைவி இருவரும் "போக்சோவில்" கைது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சங்கராபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோகன் பொன்னி தம்பதியினர்.
திருக்கழுக்குன்றம் தாலுகாவைச் சேர்ந்த, 16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது;
தனது மகளை வாலாஜாபாத்தில் உள்ள டைலரிங் பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக, பிப்ரவரி மாதம் சங்கராபுரத்தில் உள்ள தனது அக்காள் பொன்னி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
பொன்னிக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மோகன் என்பவருடன் திருமணமாகி, குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவரும் வசித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் மோகன் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய், உத்தரமேரூர் தாலூக்கா, சாலவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரத்தால், பதிக்கப்பட்டது உறுதியானது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கராபுரம் மோகன் மீதும், பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த, அவரது மனைவி பொன்னி ஆகிய இருவர் மீது "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments
Thank you for your comments