அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்...
விருத்தாசலம்:
குப்பநத்தம் ஊராட்சியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் குப்பநத்தம் கிராமத்தில் சுமார் 7 மாதங்களாக குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இயங்கவில்லை. இதனால் அக்கிராம மக்கள் பலமுறை அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
இதனால் குப்பநத்தம் கிராம பொது மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம மக்களிடம் சமாதான பேசுவார்த்தையால் ஈடுபட்டு விரைவில் கிராமத்தின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளித்ததார்.
இதனையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments