தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் உறுப்பினர்கள் சேர்த்தல், புதுப்பித்தல் பணி தொடக்கம்...
திருவள்ளுர்:
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்தல் பணி தொடங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணிபுரிவோரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்ய, அவர்களை தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து, தூய்மைப் பணிபுரிவோர் மற்றும் அவரைச்சார்ந்தவர்களுக்கு வாரிய நல உதவிகள் வழங்குவது, தூய்மை பணிபுரிவோர் நல வாரியத்தின் நோக்கமாகும்.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அனைத்து அரசு / தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் அமைப்பு சாரா (Unorganized Sector) தூய்மைப் பணியாளர்களை / தூய்மை காவலர்களை கணக்கீடு செய்து, அவர்கள் அனைவரையும், தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் விடுபடாமல் கொண்டு வந்து புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் ஏற்கனவே உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்தல் பணி தொடங்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
மாவட்ட மேலாளர் அலுவலகம்,
தாட்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருவள்ளுர் மாவட்டம். தொலைபேசி எண்.044 2766 5539
என்ற அலுவலக முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments