விருத்தாசலம் நகராட்சிக்கு புதிய பொறியாளர் நியமனம்...
விருத்தாசலம்:
விருத்தாசலம் நகராட்சிக்கு புதிய பொறியாளர் நியமனம்... ஏற்கனவே பணியிலிருந்த பாண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி பொறியாளராக பணியாற்றி வந்தவர் பாண்டு
மக்கள் மத்தியில் மிகவும் எளிமையாக பழகக்கூடியவர், மக்கள் பிரச்சினைகள் பற்றி எதுவாக இருந்தாலும் நேரில் சென்று உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கூடிய நேர்மையான நல்ல அதிகாரி.
இவர் கொரோனா காலங்களில் விருத்தாசலம் நகராட்சி பொருப்பு ஆணையாளராகவும், பணிபுரிந்துள்ளார் இவர் பணிபுரிந்த காலங்களில் விருத்தாசலம் நகராட்சியில் குடிதண்ணீர், சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்டவைகளை உடனுக்குடன் சரி செய்து வந்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மூலம் கொரோனா காலங்கலில் விருத்தாசலம் பகுதி வாழ் பொது மக்களை ஒரு சதவீதம் இறப்பு கூட இல்லாமல் உடனுக்குடன் ஆய்வு செய்து பாதுகாத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இவர் மாற்றுதிறனாளியாக இருந்தாலும் கூட அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் பொது மக்களுக்காகவே மிக சிறப்பாக பணியாற்றியவர் இவரை தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது விருத்தாசலம் பொதுமக்களின் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது
மாவட்ட நிர்வாகம் மீண்டும் அவரை விருத்தாசலம் பொறியாளராக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்குமா...?

No comments
Thank you for your comments