Breaking News

அனுமதியின்றி வண்டல் மண் எடுத்த ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் பறிமுதல்...!

பெண்ணாடம் அருகே அரசு அனுமதியின்றி வண்டல் மண் எடுத்த ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.


கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று கோவிலூர், எடையூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது எடையூர் பகுதியிலுள்ள செட்டியா குளத்தில் அரசு அனுமதியின்றி சிலர் ஜேசிபி மற்றும் டிராக்டர் மூலம் வண்டல் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். 

போலீசாரை கண்டதும் டிராக்டர் உரிமையாளர் தப்பி ஓட்டம். அங்கு ஜேசிபி ஓட்டிக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அதே பகுதி மேட்டு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ராயர்(35) என்பதும் தப்பிச் சென்ற டிராக்டர் உரிமையாளர் நடுத்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் பொன்னுசாமி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜேசிபி மற்றும் டிராக்டர் அடிப்படை பறிமுதல் செய்வதுடன், ராயர் மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து ராயரை கைது செய்தனர். மேலும் தப்பிச்சென்ற பொன்னுசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments