Breaking News

தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் ஊனத்தடுப்பு முகாம்

காஞ்சிபுரம்: 

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம், 75வது ஆண்டு  சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி AZAADIKA AMRUT MAHOTSAV தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் ஊனத்தடுப்பு முகாம், தொழுநோயால் உடல் ஊனம் அடைந்தவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


75வது ஆண்டு சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு AZAADIKA AMRUT MAHOTSAV என்ற நிகழ்வினை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் பொருட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் 03-09-2021 வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி சமுதாய சுகாதார மையத்தில் தொழுநோய் விழிப்புணர்வு. ஊன தடுப்பு முகாம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனங்கள் ஏற்பட்ட நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி பங்கேற்று தொழுநோயால் உடல் ஊனம் அடைந்த நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனம் ஏற்பட்ட நபர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்ததாவது:

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழுநோய் இல்லாத மாநிலமாக அமைய வைப்பதே இத்திட்டத்தின் இலட்சியமாகும். இந்த நோய்க்கென்று மாவட்டம் தோறும் தனியாக ஒரு இணை இயக்குனரை நியமித்து தொழு நோயை ஒழிக்க தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தொழுநோயற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவது இந்த முகாமின் முக்கியமான இலக்காகும். அதனை நோக்கி நாம் அனைவரும் முழு ஈடுபாடுடன் நாம் பணிபுரிய வேண்டும்.

தொழு நோயிற்கு ஆரம்ப காலத்தில் மாத்திரை, மருந்துகள் மற்றும் சிகிச்சை பெற போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்பொழுது மாத்திரை, மருந்துகள் மற்றும் உபகரணங்கள் கண்டறியப்பட்டதால் இந்நோய்க்கு சிகிச்சை எளிமையாக மேற்கொள்ள முடிகிறது. அதேபோல், தொழு நோய் எவ்வளவு விரைவாக கண்டறியபடுகிறதோ அதற்கு விரைவாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். ஆகவே இந்த முகாமில் கலந்துகொண்ட அனைவரும் சென்று பொதுமக்கள் அனைவருக்கும் இந்த முகாமை குறித்து எடுத்துரைக்க வேண்டும். மேலும், இங்கு வந்திருக்கும் அனைவரும் இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) மரு.D.கனிமொழி,  துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.பழனி, வட்டார மருத்துவ அலுவலர் (சமுதாய சுகாதார நிலையம்) திருமதி.அருள்மொழி, மருத்துவர்கள், நலக்கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

✒ செய்தியாளர் E. ஜாபர் 


 


No comments

Thank you for your comments