மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. ஆய்வு
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் அவர்கள் உத்தரவின் பெயரில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தமன்னன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் சோராஞ்சேரி ஊராட்சியில் அணைக்கட்டு சேரிப்பகுதியில் முன்னெச்சரிக்கை காரணமாக வருகின்ற மழைக்காலங்களில் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் உள்ள குப்பைகளும் நீர் தேங்கி உள்ளதா என்பதை கண்காணித்து வந்தனர்.
சில இடங்களில் பிரியாணி பொட்டலங்கள் மற்றும் இளநீர் அருந்தி விட்டு இரண்டாக பிளந்து அப்படியே போடுவதாலும் டயர் உள்ளிட்ட பாெருட்களில் நீர் இருப்பதைக்கண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இவர்களுடன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எல்லப்பன் சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் ஊராட்சி செயலர் முனி வேல் உடன் இருந்தனர்

No comments
Thank you for your comments