பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை:
பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய எட்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மகாலட்சுமி (16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தனியாக இருந்தவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மகாலட்சுமி பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.


No comments
Thank you for your comments