Breaking News

வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து...!

கடலூர்:

வேப்பூர் பஸ் நிலையம் அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து  மோதி விபத்துக்குள்ளானதில், 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மதுரையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், (வயது 50) இவரது பேத்தி பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்க, சென்னை நோக்கி  தனது உறவினர்கள் 11 பேருடன்  19- ந் தேதி ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை வேனில் புறப்பட்டனர். 

வேனை மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சேர்ந்த சரவணன்,(வயது 26) என்பவர்   ஓட்டினார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் பஸ் நிலையம் அருகே  வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து  பயணிகளை இறக்குவதற்காக நின்றது 

இதனால் அரசு பஸ்சுக்கு பின்னால் வந்த மாருதி காரும், அதன் பின்னால் வந்த லாரி அதனை தொடர்ந்து வந்த  வேன் மீது அதன் பின்னால் வந்த லாரியும்  மோதி விபத்துக்குள்ளானது. அதில் வேனின் முன்பகுது பின்பகுதி என  இருபுறமும் சேதமடைந்தது.

மேலும் வேனில் பயணித்த 11 பேர், காரில் பயணித்த 4 பேர், 2 லாரி டிரைவர்கள் உட்பட சுமார் 20 பேர்  லேசான காயத்துடன்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இந்த விபத்து குறித்து வேப்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை செய்து வருகிறார்.

No comments

Thank you for your comments