அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் வழங்கல்
காஞ்சிபுரம்:
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு பள்ளி மாணவிகள் 113 பேருக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருட்களை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி. ரஞ்சித்குமார் வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்வரும், காஞ்சிபுரம் மண்ணின் மைந்தருமான, பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது..
காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு வாலாஜாபாத் ஒன்றிய முன்னாள் கவுன்சிலரும், சமூக ஆர்வலருமான ஆர்.வி.ரஞ்சித் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், அண்ணாவின் வீட்டின் அருகில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பேரறிஞர் அண்ணாவின் கொள்கை, கோட்பாடுகளை எடுத்துக் கூறி, 113 பள்ளி மாணவிகளுக்கு விலையில்லாநோட்டு புத்தகங்கள், மற்றும் பேனா, பென்சில், உள்ளிட்ட எழுது பொருட்களை ஆர்.வி.ரஞ்சித் குமார் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் போது பள்ளி ஆசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments