ஆபத்தை விளைவிக்கும் மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பொதுமக்கள் தர்ணா...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகம் எதிரே ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் அமைந்துள்ள பழுதான மின்மாற்றி வேறு இடத்திற்கு மாற்றி தர கோரி 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து மின்மாற்றி அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்..
உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடிய வகையில் உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்ற கோரி ஒலிமுகமது பேட்டை மின்வாரிய கிடங்கிற்கு எதிரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது.
இந்த ட்ரான்ஸ்பாரம் அடியில் நுழைந்து தான் அங்குள்ள வீடுகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது...
குழந்தைகளும் பொதுமக்களும் ஆபத்தை உணராமல் டிரான்ஸ்பாரத்தை கடந்து செல்கின்றனர். தற்போது இந்த டிரான்ஸ்பாரத்தை தாங்கி நிற்கும் கம்பங்கள் முழுமையாக பழுதடைந்து விட்டதால் அதை மின்வாரியம் புதிதாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது... இந்நிலையில், மின்வாரிய கிடங்கில் அருகில் காலியாக உள்ள பகுதியில் இந்த டிரான்ஸ்பாரத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள்கோரிக்கையாக உள்ளது...
இதுவரை கண்டுகொள்ளாத மின்சார வாரியம் அலுவலகம் எதிரே ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் அமைந்துள்ள பழுதான மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி தர கோரி அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து மின்மாற்றி அருகில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்,


No comments
Thank you for your comments