9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி – விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிடுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (15-9-2021) அறிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்குதல் சம்பந்தமாக, தேமுதிக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாள்கள் காலை 10.00 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழகத் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
![]() |
| *Advt |
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.
கட்டணத் தொகை:
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - 4,000/-
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் - 2,000/-
இவ்வாறு, தேமுதிக விஜயகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Following #PMK, DMDK has also announced that it will contest alone in TN rural body elections. #DMDK which formed alliance with #AMMK for the 2021 state Assembly election has ended the ties with the party after a dismal performance in the election.#LocalbodyElection #TamilNadu pic.twitter.com/FSZpzthNf9
— DT Next (@dt_next) September 15, 2021



No comments
Thank you for your comments