விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்
விருத்தாசலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமற்ற நெல் வினியோகம் செய்வதாக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர் .
கடலூர் மாவட்டத்தில் சுமார் 1 1/2 லட்சம் ஏக்கர் நெல் 10 ஆயிரம் ஏக்கர் கரும்பு மற்றும் மணிலா நெல் மக்காச்சோளம் துவரை உளுந்து மரவள்ளி கரும்பு வரத்து மற்றும் காய்கறிகள் முந்திரி முருங்கை போன்ற விவசாய விளைபொருட்கள் சாகுபடி செய்துவருகின்றனர்.
சுமார் 80 ஆயிரம் விவசாய குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றனர் நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க காலங்களில் அயராது உயிரின் பாதுகாப்பையும் மீறி உணவு தானியங்களை விதைத்து வருகின்றனர் .
இவர்களின் பலதரப்பட்ட குறைகளை மாதந்தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவசாய பிரதிநிதிகளை அழைத்து உணவு உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகளின் பொருளாதாரம் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு நேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் குறை கேட்கும் தீர்வு வழங்குவது காலம்தொட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது .
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியால் கூட்டம் தொடராமல் குறைகள் வலுவாகவும் விவசாயிகளின் பிரச்சினைகள் கேள்விக்குறியாகும் இருந்த வேளையில் கடந்த 5 மாதமாக அந்தந்த விருத்தாசலம் ஒன்றியத்தின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ZOOM மீட்டிங் நடத்தி வரும் தருவாயில் விருத்தாசலம் ஒன்றியத்தில் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டம் விவசாயிகள் பிரதிநிதிகளிடம் நடக்கும் நாள் தெரிவிப்பது இல்லை மேலும் விவசாயிகளின் குறைகள் விவசாயிகள் வாழ்வா.....? சாவா... ? என்ற மன உளைச்சலோடு கஷ்டமும் குறைகளை வாழ்க்கை என்ற கோணத்தில் விவசாயம் செய்து வரும் வழியில் மன உளைச்சலுக்கு உடல் ஆரோக்கியமும் பசி பட்டினியுமாக கவலையோடு தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையும் விவசாயிகள் இந்த ஆண்டு சாகுபடி செய்து விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பத்து கோரிக்கைகளுக்கு ஒரு கோரிக்கையாக அது நிறைவேறியது விவசாயிகளுக்கு ஆறுதலாக இருந்தது .
தற்போதைய வேளாண் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் தற்போதைய சம்பா பருவம் சாகுபடி செய்யாமலேயே வேண்டாமா... என்ற மனநிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியரிடம் மாதம் ஒரு முறை கூட்டத்தில் குறைகளை போக்கி விவசாயம் செய்யலாம் இந்த ஆண்டாவது கஷ்டம் கடன் தீரும் என்ற நிலையில் வேளாண் துறை அதிகாரிகளின் மெத்தன போக்கு கவலை அளிக்கிறது .
இதனை கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமற்ற விதை நெல் கொடுப்பதாக கூறி விதைநெல் கொண்டு வந்தது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சக்திவேல் தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் தரமற்ற விதை நெல் கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர் இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments