முககவசம் வழங்கி முன்னாள் மாணவர்கள் வரவேற்பு.
திட்டக்குடி:
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு முககவசம் வழங்கி முன்னாள் மாணவர்கள் வரவேற்பு.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளும் மாணவர்கள் நலன் கருதி மூடப்பட்டன.
தமிழக அரசும் பல்வேறு வழிமுறைகளில் கொரோ பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது தற்போது கொரோனாவின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து பள்ளிகளும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தார்கள் அப்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் பாதுகாக்கும் வகையிலும் முன்னாள் மாணவர்கள் முககவசம், இனிப்புகள் வழங்கி அவர்களை வரவேற்றார்கள்.

No comments
Thank you for your comments