கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் - கல்லூரிள் திறப்பு
தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டது. நண்பர்களை சந்தித்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உலகெங்கும் கொரோன எனும் கொடிய நோய் தொற்றால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் அதை கட்டுபடுத்த மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து படிப்படியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்து பள்ளிகள் திறப்பில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது. இதற்காக கடந்த 30ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்து பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க பாடபுத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. அரசு அறிவித்தபடி இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 520 மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். வந்த மாணவர்களுக்கு அரசு விதித்த விதிமுறைகள் பின்பற்றி மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டு மாணவர்கள் கொரோனா பரவல் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் பள்ளியில் உள்ள 26 வகுப்பறைகளில் ஒரு வகுப்பறையில் 20 பேர் கொண்ட மாணவர்களை தனித்தனியாக உட்கார்ந்து படிப்பினை தொடர்ந்தனர். மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முககவசம் வழங்கி பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் மயில்வாகனன், மணிவண்ணன், வடிவேல், பிரபாகரன், தவமணி, சகாதேவன்,கோவிந்தராஜன், சுகுமார், நாகராஜ் மற்றும் இருபால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


No comments
Thank you for your comments