Breaking News

திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் வாக்கு சேகரிப்பு



👆 வீடியோவை கிளிக் செய்யுங்கள்  👆
சொன்னதைச் செய்தார்களா திமுக அரசு...? 
500 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றினார்கள்? 

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டம் 1வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களின் தேர்தல் பணிமனையை துவக்கி வைத்து 1-ம் நாள் பிரச்சாரத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் துவக்கி வைத்தார்.


வருகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் 1வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளராக நித்யா சுகுமார் போட்டியிடுகிறார். 

இன்று காஞ்சிபுரம் ஒன்றியம் பாலுச்செட்டி சத்திரம் பகுதியில் வேட்பாளர் நித்யா சுகுமாரின் தேர்தல் அலுவலகத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். 

பின்பு பாலுச்செட்டி சத்திரம் பஜார் வீதி மற்றும் தாமல் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வேட்பாளர்  நித்யா சுகுமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மலர்கொடி குமார், மோகனா இளஞ்செழியன், ராம்பிரசாத், வளர்மதி, வரதன், பாலஜி, ஆதிலட்சுமி, ரேகா ஹேமலதா, புண்ணியக்கோட்டி உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சினிவாசன் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு  வாக்குகளை  சேகரித்தனர்.

No comments

Thank you for your comments