தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
3 வருடமாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி விருத்தாசலத்தில் போலிசார் பிடிக்கும்போது விஷம் அருந்தி தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் விக்கிரவாண்டி சம்சுதீன் மகன் அலாவுதீன் இவர் பல கொலை கொள்ளை குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
👆 வீடியோவை கிளிக் செய்யுங்கள் 👆சொன்னதைச் செய்தார்களா திமுக அரசு...?500 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றினார்கள்?
கடந்த 2018ஆம் ஆண்டு இவர் சிறையில் இருந்து விடுப்பில் தனது விக்கிரவாண்டியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது காவல்துறையினருக்கு தெரியாமல் தலைமறைவாக தப்பி ஓடி மறைந்துள்ளார்
இது பற்றி கடந்த 3 ஆண்டுகளாக காவல்துறையினர் அலாவுதீனை பல இடங்களில் தேடி வந்த நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுப்பேட்டை தெருவில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த விழுப்புரம் மாவட்ட குற்றவியல் போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார்
உடனடியாக காவலர்கள் அலாவுதீன் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர் அங்கு போதிய அளவு சிகிச்சை அளிக்க உபகரணங்கள் இல்லாததால் மேல்சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சிறைக்கைதி காவலர்கள் பிடிக்கும்போது விஷம் அருந்தியதால் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments