நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கௌரவிப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கௌரவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர் களையும் ஆசிரியர் திலகம் மற்றும் ஆசிரியர் தீபம் பெற்ற ஆசிரியர்களையும் சிறப்பிக்கும் நிகழ்வு நாகர்கோவில் டீம் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் திருமதி. மேரி ஸ்டெல்லா பாய் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் திருமதி சாரதா பாய் மாவட்ட துணைத்தலைவர் திருமதி டெல்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கொரோனா மற்றும் உடல்நலக்குறைவால் பலியான ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் திருமதி லீமாரோஸ் அனைவரையும் வரவேற்றார் .
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் ஆசிரியர் தீபம் விருது பெற்றவருமான திரு. செந்தில் அவர்கள் பாடல் பாடினார்.
மாதர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் திருமதி உஷா பாசி அவர்கள் விருது பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
மாதர் சங்க நிர்வாகிகள் சார்பில் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பரிசளித்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விருது பெற்ற ஆசிரியர்கள் சார்பாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் திருமதி மலர்விழி ஏற்புரை வழங்கினார். விருதுபெற்ற ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டதும் மாதர் சங்கத்தின் செயல்பாடுகளைக் கேட்டு அறிந்து கொண்டதும் சிறப்பானதாக இருந்தது.
நிறைவாக மாதர்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெகுபதி நன்றி கூறினார் . கல்லூரிப் பேராசிரியர் திருமதி சுபத்ரா செல்லத்துரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
No comments
Thank you for your comments