Breaking News

மரவள்ளி கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்... கவலையில் விவசாயிகள்

கடலூர்:

மரவள்ளி கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்... மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை ஆழ்ந்துள்ளனர்.


கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் 500 ஏக்கருக்கும் மேல்  மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர்.

தற்பொழுது பயிர்கள் வளர்ச்சி அடையும் நேரத்தில் மாவு பூச்சிகளின் தாக்குதலால் பயிர்களின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும், ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும்,  இதே நிலை நீடித்தால் அதிக அளவு நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என கவலையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

பலமுறை மருந்துகள் தெளித்தும் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறும் விவசாயிகள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல்  அலட்சியப் படுத்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

விவசாயிகளின் கவலை தீர அரசு  நடவடிக்கை எடுக்குமா... என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது... 

No comments

Thank you for your comments