Breaking News

புறம்போக்கு நில கட்டிடங்களுக்கு இனிமேல் மின் இணைப்பு இல்லை... தமிழக அரசு அதிரடி முடிவு

சென்னை, 

அரசு புறம்போக்கு, நீர் நிலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்படும் புதிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது. தண்ணீர் இணைப்பும் வழங்கப்படமாட்டாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின் இறுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் நீர்நிலைகள் ஆகியவற்றில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் பிற அமைப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது பொதுப்பணித்துறை, பஞ்சாயத்துதுறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த அறிக்கையில் அரசு புறம்போக்கு நிலங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து எழுப்பப்படும் கட்டடங்கள் அமைப்புகளுக்கு மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு தரக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

Click here 👉 வரி பங்கீடு விவாதமும் -  நிதிஅமைச்சர் கூறியது   சரியான பதிலா?

இந்த நடவடிக்கை வெள்ளம் மூலம் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் உதவும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments