Breaking News

நாளை முதல் அரசு ஏசி பஸ்களின் சேவை தொடக்கம்...

சென்னை:

அரசின் வழிகாட்டுதலின்படி விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் 20 பேரும், மற்ற போக்குவரத்து கழக பஸ்களில் 26 பேரும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஏசி பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பரவல் குறைந்ததை அடுத்து ஏ.சி. பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகளுடன் ஏ.சி. பஸ்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக குளிர்சாதன வசதியுள்ள பஸ்கள் ஓடாததால், அதனுடைய உதிரி பாகங்கள் பழுதடையாமல் இருக்க ஒவ்வொரு வாரமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நாளை 1ஆம் தேதி முதல் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 702 குளிர்சாதன வசதிகொண்ட பேருந்துகள் இயக்குவதற்கு தயார்படுத்தப்பட்டன.

Click here 👉 வரி பங்கீடு விவாதமும் -  நிதிஅமைச்சர் கூறியது   சரியான பதிலா?

பேருந்துகளின் பேட்டரி, குளிர்சாதன பாகங்கள் ஆகியவற்றை சரிசெய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. அனைத்து பேருந்துகளும் இயக்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை காலை முதல் பஸ் சேவை தொடங்குகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது,  அரசு ஏசி பஸ்களை இயக்க தயாராக வைத்துள்ளோம். அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்களில் உள்ள ஏசி பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் வழிகாட்டுதலின்படி விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் 20 பேரும், மற்ற போக்குவரத்து கழக பஸ்களில் 26 பேரும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும். அனைத்து பயணிகளும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தபிறகு பேருந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஏ.சி. பேருந்துகளில் தினமும் கிருமி நாசினி தெளித்து இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments

Thank you for your comments