Breaking News

மனு வாங்க அதிகாரிகள் இல்லை... பேரூராட்சி சுவரில் ஒட்டிய விவசாய சங்கத்தினர்


விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் விவசாய சங்கத்தினர் மனுவை அலுவலக சுவரில் ஒட்டினர்.


திட்டக்குடி வெல்லிங்டன் நீர் தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்க தலைவர் பேரின்பம் நிர்வாகிகள் முருகானந்தம், முருகப்பன் ஆகியோர் மனு கொடுக்க நேற்று மதியம் திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் வந்தனர்.

மனுவை பெற அதிகாரிகள் யாரும் இல்லை அங்கிருந்த தற்காலிக பணியாளர் மனுவை ஒப்புகை இரசீது வழங்க முடியாது எனவே விவசாய சங்கத்தினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்

அதிகாரிகள் வரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த சங்கத்தலைவர் பேரின்பம் மனுவை பேரூராட்சி அலுவலக சுவரில் ஓட்டினார்.

அதில் வெலிங்டன் பாசன வாய்க்கால் தரையில் போடப்படும் சாலை குறித்து பணி விபரம் தெரிவிக்க வேண்டும், சாலையை தரமாக அமைக்க வேண்டும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments