பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி... !
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சியில் அணைக்கட்டுச்சேரி காலனி பகுதி மற்றும் புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பெயரை வைத்த எம் ஜிஆர் சாலைகள் அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இப்போது அந்த சாலைகள் குண்டும் குழியுமாகவும் சிலர் ஆக்கிரமித்தும் கருங்கல் ஆங்காங்கே சிதறியும் கிடைக்கிறது.
இந்த சாலைகளை சீர் செய்யாததால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையில் பொதுமக்கள் காலணி இல்லாமல் நடந்து செல்வது மிக கடினம்.
சாலை சேதமடைந்த நிலையில், பல்லாங்குழிகளாக மாறி, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், தண்ணீர் தேங்கி இருக்கும் பள்ளங்களில் செல்லும் போது, நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து, காயங்களுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த சாலைகளை தற்போது உள்ள நிர்வாகம் உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
உடனடியாக சீர் செய்யப்படுமா... அல்லது செவிடன் காதில் ஊதிய சங்கு போல மக்களின் கோரிக்கை இருக்குமா.. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..
No comments
Thank you for your comments