உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு... 2 கட்டங்களாக வாக்குப்பதிவு
சென்னை:
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் அட்டவணை:
- வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - 15.09.2021
- வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் - 22.09.2021
- வேட்பு மனு பரிசீலனை - 23.09.2021
- வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் - 25.09.2021
- முதற்கட்ட தேர்தல் - 06.10.2021
- 2ஆம் கட்ட தேர்தல் - 09.10.2021
- வாக்கு எண்ணிக்கை - 12.10.2021
ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் வாக்குச் சீட்டு முறையில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும்
தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். சட்டசபை கூட்டம் நடந்ததால் தேர்தல் தேதி அறிவிப்பும் தள்ளிப் போனது.
சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இரண்டு கட்டங்களாக தேர்தல்
அப்போது அவர் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ல் முதற்கட்ட தேர்தலும், அக்டோபர் 9ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும்.
வேட்பு மனு தேதிகள்
செப்.15 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
செப்.22ம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்.
செப்டம்பர் 23ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.
செப். 25ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள்.
அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 7மணி முதல் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்
முதற்கட்ட தேர்தலில் சுமார் 41,93,996 வாக்காளர்கள் வாக்களிப்பர், 2ம் கட்ட தேர்தலில் சுமார் 34,65,724 வாக்காளர்கள் வாக்களிப்பர்.
14,573 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்குச் சீட்டு முறையில் மட்டுமே வாக்குப்பதிவு
ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் வாக்குச் சீட்டு முறையில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும்.
4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு மட்டும், மொத்தம் சுமார் 27ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நேரடி தேர்தலில் வென்றவர்கள் அக்டோபர் 20ம் தேதி பதவி ஏற்பர்.
ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் 5 வருடங்களுக்கு பதவியில் இருப்பர்.
மறைமுக தேர்தல்
மாவட்ட ஊராட்சி தலைவர்-துணைத் தலைவர், ஒன்றிய குழு தலைவர்-துணைத்தலைவர் பதவிகளுக்கும் அக்டோபர் 22ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும்.
நேரடி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் வாக்களிப்பர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது
பணியாளர்களின் தேவையை அடிப்படையாக கொண்டு, நிர்வாகக் காரணங்களுக்காகவே, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தான் தேர்தல் பிரச்சாரம் அனுமதிக்கப்படும்
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
No comments
Thank you for your comments