Breaking News

குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கையால், காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியிலிருந்து லாரி மூலம் கர்நாடகாவிற்கு கடத்தப்படவிருந்த  ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டன.  12 டன் ரேஷன் அரிசி, மூன்று லாரிகள் பறிமுதல் செய்தனர்.   லாரி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக  காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாலுசெட்டி சத்திரம் பகுதியில் காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர்.


திடீர் வாகன சோதனையின்போது அடுத்தடுத்து வந்த 3 கன்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்ட பொழுது கண்டனர் லாரி ஒன்றில் ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்தப்படுவதை கண்டுபிடித்தனர்.

லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் உள்ள கிடங்கிலிருந்து ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதாக தகவல் தெரிவித்தார்.

உடனடியாக போலீசார் கிடங்கில் சோதனை மேற்கொண்ட பொழுது அங்கு கடத்துவதற்காக4 பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கண்டுபிடித்தனர்.


இதைத்தொடர்ந்து,  லாரி மற்றும்  அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்த விருந்த மூன்று லாரிகளையும்,  குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அரிசி கடத்தி வந்த லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இரு லாரி டிரைவர்களையும், லாரி உரிமையாளர்களையும், ரேஷன் அரிசி கடத்தியவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


✒ செய்தியாளர் E. ஜாபர்  

No comments

Thank you for your comments