Breaking News

ஆசிரியர் பட்டய பயிற்சி பொது தேர்வை புறகணித்த மாணவர்கள்...

காஞ்சிபுரம்:

ஆசிரியர் பட்டய பயிற்சி பொது தேர்வு அவசரமாக நடைபெறும் தேர்வு என மாணவர்கள் வேதனை தேர்வினை தள்ளி வைக்க வேண்டி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்.


ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி தேர்வு இன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது இந்நிலையில் பொது தேர்வு குறித்து  ஆசிரியர் பயிற்சி மாணவர்களிடம் எவ்வித கருத்து கேட்காமலும் அவசர அவசரமாக தேர்வு கட்டணம் செலுத்த செய்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே தேர்வு நடைபெறுவது மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கின்றது என்று  தேர்வு எழுதும் மாணவர்கள் மனதளவில் இன்னும் தேர்வுக்கு தயாராகாத நிலையில் பொதுத் தேர்வுக்கு தயாராக இன்னும் காலஅவகாசம் வேண்டியும், ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற இருந்த தேர்வு மையத்தில் இருந்து தேர்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் இன்னும் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றும் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக குறையாத காரணத்தால் மாணவர்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும் மாணவர்களுக்கு 75% வகுப்புகள் ஆன்லைன் மூலம் தான் நடைபெற்றது என்பதனால் பொது தேர்வும் ஆன்லைன் மூலமாக தான் நடைபெறும் என நம்பி இருந்ததாகவும் தற்போது பொது தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு இதற்கு முன்னர் எவ்வித பருவத்தேர்வும் எழுதாத சூழ்நிலையில் இப்பொழுது நேரடியாக பொதுத்தேர்வு எழுத இருப்பது மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எனவே அவசர அவசரமாக தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால் மாணவர்கள் முழுமையான தேர்வுக்கு தயாராக வில்லை என்று கூறுகின்றனர். மேலும் கடந்த வருடமும் அவசர அவசரமாக தேர்வு நடத்தி அனைத்து மாணவர்களையும் தோல்வியடையச் செய்து விட்டார்கள் என்று கூறி இன்று நடைபெற இருந்த தேர்வை முழுவதுமாக புறக்கணித்து தேர்வுக்கு தயாராக கால அவகாசம் வழங்குமாறு தேர்வினை அக்டோபர் மாதம் நடத்த வேண்டி மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


✒ செய்தியாளர் E. ஜாபர்  

No comments

Thank you for your comments