Breaking News

நீண்ட இடைபெளிக்கு பிறகு பள்ளிகள் திறப்பு... மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

காஞ்சிபுரம்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவிகளுக்கு சத்தான கடலைமிட்டாய் மற்றும் பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  மா. ஆர்த்தி ஆய்வு செய்து மாணவிகள் மத்தியில் கொரோனா நோய் தொற்றால் நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ள பாடம் நடத்தினார்.


தமிழகம் முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு கொரோனா  விதிமுறைகளை பல்வேறு தளர்வுகளவுடன் அறிவித்திருந்தது.

இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இன்று 239 பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதில் மாணவ மாணவிகள்  மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு  வருகை புரிந்த உள்ளார்.


இதில் 9,10,11,12,வகுப்புகளை சேர்ந்த அரசு பள்ளியைச் சேர்ந்த மாண வர்கள் 41,023 மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 19,000 , இதர வாரிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 12110  என மொத்தமாக 72133 மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய உள்ளனர்.

182 பள்ளிகள் முழு அளவிலும் 57 பள்ளிகளில் சுழற்சி முறையிலும் வகுப்புகள் செயல்பட உள்ளது.


இன்று முதல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முதலில் சனிடைசர் பின்னர் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களை உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் இயங்கும் அரசு B.M.S. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இந்த பரிசோதனை மற்றும் சனிடைசர் அளித்து சத்தான கடலை மிட்டாய் மற்றும் பூ கொடுத்து வரவேற்றனர்.

இப்பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாணவிகள் மத்தியில் நோய் தொற்றிலிருந்து எவ்வாறு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என பாடம் நடத்தினார்.

✒ செய்தியாளர் E. ஜாபர்  

No comments

Thank you for your comments