இரண்டாம் கட்ட மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
ஈரோடு, செப்.17-
ஈரோடு மாவட்டத்தில் (19.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மாபெரும் கொரோனா சிறப்புதடுப்பூசி முகாமில் 100 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திடவேண்டும் - மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (16.09.2021), ஈரோடு மாவட்டத்தில் (19.09.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி எனும் உயரிய நோக்கில் (12.09.2021)அன்று ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சிறப்பாக நடத்திக் கொடுத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்க கொள்கிறேன். இம்மாபெரும் தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட 97,198 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு இல்லாமல் கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த நிரந்தரதீர்வு அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஆகும். 100 சதவீத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதே அரசின் நோக்கம் ஆகும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களும் தடுப்பூசி செலுத்த துண்டுப்பிரசுரம், ஒலிப்பெருக்கி போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி நம் இலக்கை அடைய வேண்டும். இந்ந இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாமில் 100 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளவதே இலக்காக இருக்கவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட 548 மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி தேவைப்படும் இடங்களில் உடனடியாக மாற்று இடங்களில் இருந்து தடுப்பூசிகள் அனுப்பி வைத்திடவேண்டும்.
தடுப்பூசி செலுத்த வரும் மக்கள் எவ்வித சிரமமின்றி வந்து செல்லும் வகையில், அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்தும், சமூக இடை வெளியினை கடைபிடித்தும் தடுப்பூசி செலுத்தி கொண்டு, தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் ப.முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் மரு.மா.இளங்கோவன், மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.பெ.பிரேமலதா (ஈரோடு), திருமதி.பழனிதேவி (கோபி), இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.கோமதி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சோமசுந்தரம், மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.பிரகாணு உட்பட அனைத்துறை முதன்மை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments