Breaking News

கடலூர் மேற்கு மாவட்டம் விசிக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 143 -வது பிறந்தநாள் சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவிப்பு செய்தது.

செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக ஏற்று எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதிமொழியை கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் அடுத்து மேட்டுக்குப்பம் ஆர்ச் முகாம் சார்பாக ஏற்றுக் கொண்டோம்  

இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று மருத்துவர் புருஷோத்தமன்  நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் குரு கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர்கள் ராகவன் கணேஷ் ராஜேஷ் அருள்முருகன் ஞானபண்டிதன் தலித் ஏழுமலை ரூபி தினேஷ் பிரித்திவி வல்லரசு வள்ளல் மற்றும் தோழமை கட்சி சார்ந்த திராவிடர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments