ஆயுஷ் அமைச்சகமும் சார்பில் இலவசமாக மூலிகை தாவரங்கள் வழங்கல்...
காஞ்சிபுரம்,செப். 3-
ஆயுஷ் அமைச்சகமும், தமிழ்நாடு மூலிகை தாவர வாரியமும் இணைந்து காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை மூலிகைத்தாவரங்கள் வழங்கும் விழாவை நடத்தினார்கள்.
![]() |
| படவிளக்கம்.. திருப்புட்குழி அரசு ஆரம்ப சுதாகார நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மூலிகைத் தாவரங்களை காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார். |
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களைத் தேடி மருத்துவம் என்பதை வலியுறுத்திடும் வகையில் ஆயுஷ் அமைச்சகமும்,தமிழ்நாடு மூலிகைத் தாவர வாரியமும் இணைந்து இலவசமாக மூலிகைத் தாவரங்கள் வழங்கும் விழாவை நடத்தினார்கள்.திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகைச் செடிகளை நட்டு வைத்த அவர் பின்னர் பொதுமக்கள் பலருக்கும் மூலிகைத் தாவரங்களை இலவசமாக வழங்கினார்.
பின்னர் மூலிகைச் செடிகளின் மகத்துவத்தை பற்றியும் விரிவாக விளக்கிக் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாச்சாமி,திருப்புட்குழி சித்த மருத்துவர் முத்துக்குமார் உட்பட மருத்துவ அலுவலர்கள்,பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
✒ செய்தியாளர் E. ஜாபர்

No comments
Thank you for your comments