தடைசெய்யப்பட்ட 868 பாக்கெட் புகையிலை, குட்கா மற்றும் ரூ. 5,44,635/- பறிமுதல்
கன்னியாகுமரி, செப்.03-
கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று கோட்டார் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. செல்வ நாராயணன் அவர்களுக்கு மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு சென்று அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை செய்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த மேக்னராம்(38) என்பது தெரியவந்தது.
பின்பு அவரை தீவிர விசாரணை செய்து அந்த இடத்தை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு, விற்பனை செய்ததை கண்டுபிடித்தார். பின்பு அவரிடமிருந்த 868 பாக்கெட் குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் 5,44,635 /- ரூபாயை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தார். மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 பேர் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2842 பாக்கெட் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments