பாஜக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக ஜமுனா பழனிவேல் வேட்புமனு தாக்கல்
விருத்தாசலம்
முகாசபரூர் 7-வது வார்டு பாஜக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக ஜமுனா பழனிவேல் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் முகாசபரூர் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக ஜமுனா பழனிவேல் பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
இவர் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக சென்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதில் விருத்தாசலம் நகர, தெற்கு, வடக்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள்,மாநில, மாவட்ட நிர்வாகிகள், விருத்தாசலம் நகர மாநில மாவட்ட அணி, பிரிவு நிர்வாகிகள் பெருந்திரளாக மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்


No comments
Thank you for your comments