Breaking News

பாமக வேட்பாளர் ஜெயசித்ரா ஜெயபால் வேட்புமனு தாக்கல்

விருத்தாசலம்

முகாசபரூர் 7-வது வார்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் ஜெயசித்ரா ஜெயபால் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடலூர் மாவட்டம்  விருத்தாசலம் ஒன்றியம் முகாசபரூர் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக ஜெயசித்ரா ஜெயபால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்  கார்த்திகேயன் தலைமையில் ஏழாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஜெயசித்ரா ஜெயபால் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

இதில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் சிடி விஜயகுமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் எம்.ஆர்.மணிகண்டன், நகர வர்த்தக அணி செயலாளர் சிவா, ஒன்றிய தலைவர் ஆனந்தன், மாவட்ட துணைத்தலைவர் வடிவேல், ஒன்றிய செயலாளர்கள் பாக்யராஜ், ஜெயபால், மதியழகன், பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வன்னியர் சங்க துணை செயலாளர் சக்கரவர்த்தி நகர செயலாளர் தமிழரசு, பசுமை தாயகம் நகர செயலாளர் தனசேகரன்  உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments