அமமுக வேட்பாளர் சாவித்திரி கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
விருத்தாசலம்
முகாசபரூர் 7-வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக சாவித்திரி கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் முகாசபரூர் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக சாவித்திரி கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அக்ரி முருகேசன் தலைமையில் விருத்தாசலம் 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அதிகாரியிடம் சாவித்திரி கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன். மாவட்ட அமைப்பு செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் தாசில்தார் ராஜா, எம்.பருர் கிளை செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன், ரமேஷ், வல்லிக்கண்ணன், நல்லதம்பி, ஆரோக்கியம் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


No comments
Thank you for your comments