Breaking News

கொரோனாவால் உயிரிழந்த காவலருக்கு சக காவலர்கள் நிதி திரட்டி வழங்கல்

தர்மபுரி 
இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 22-5-2021 ம் ஆண்டு A. பள்ளிப்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் விஜயகுமார் என்பவர் கொரோனா நோய் பாதிக்கப்பட்ட காலமானார்.  

அவருடன் 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள 2011 ஆம் ஆண்டு காவலர்கள் ஒன்றிணைந்து அவருடைய குடும்பத்திற்கு 22,58,156 ரூபாயை   தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்கள் மூலமாக விஜயகுமார் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. அண்ணாமலை மற்றும் 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments