Breaking News

குடும்ப நிகழ்ச்சிகளால் அதிகரிக்கும் கொரோனா தொற்று

ராயபுரம்:

பொழுது போக்கு இடங்களாக உள்ள நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் நாகை, விருதுநகர், மாவட்டங்களிலும் தொற்று அதிகளவில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று 3-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

தேவையான தடுப்பூசி இன்று கையிருப்பு உள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும்.

பெரும்பாலான தொற்றுகள் குடும்ப நிகழ்வுகள் மூலம் வருகிறது. குறிப்பாக அரியலூர், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் குடும்ப நிகழ்ச்சிகளால் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் பொழுது போக்கு இடங்களாக உள்ள நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் நாகை, விருதுநகர், மாவட்டங்களிலும் தொற்று அதிகளவில் உள்ளது.

சென்னையில் பணி சார்ந்த நிகழ்ச்சிகள், பொழுதுபோக்குகள் போன்ற காரணங்களால் நோய் தொற்று சற்று அதிகமாக காணப்படுகிறது.

60 வயதை கடந்தவர்கள் 86 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், 41.78 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். முதியவர்களுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்த குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அழைத்து வரவேண்டும் . சென்னையில் வீடு தேடி முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும். பூஸ்டர் தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது. சிகிச்சைக்கு அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments