கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் முன்னணியில் காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் இன்று 3-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 450 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மூன்றாவது கட்டமான தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தி அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொது மக்களும் ஆர்வத்துடன் பல்வேறு இடங்களில் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 9 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு தமிழகத்திலேயே இரண்டாவது மாவட்டமாக அதிக தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்டமாக எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments