Breaking News

கட்டிய ஏலச்சீட்டு பணத்தை திரும்ப கேட்டதால் நேர்ந்த பரிதாபம்... !

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் சுந்தரம்  (வயது 40 ). இவரது தாயார் சாவித்திரி வேலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். 

அதிமுக பிரமுகரான சுந்தரம் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஏலச்சீட்டும் நடத்தி வருகிறார். பாப்பாரப்பட்டி அப்பு முதலி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தனசேகரன் (வயது 34). கட்டட தொழிலாளியான தனசேகரன் சுந்தரத்திடம் ஏலச்சீட்டு கட்டி வந்துள்ளார். 

கடந்த 10-ஆம் தேதி தனசேகரன் ஏலச்சீட்டு எடுக்க சுந்தரம் சீட்டு நடத்தும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அலுவலகம் பூட்டிக்கிடந்தது. 

இதனைத் தொடர்ந்து தனசேகரன் சுந்தரத்திடம் போனில் பேசியபோது மறுநாள் சீட்டு ஏலம் விடுவதாக கூறியுள்ளார். மறுநாளும் அலுவலகம் சென்று பார்த்தபோதும் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. ஏலச்சீட்டு எடுக்க சென்ற தனசேகரன் தனது மனைவி தேவி மற்றும் சகோதரி கவிதா ஆகியோரோடு  வேலம்பட்டியில் உள்ள சுந்தரத்தின் வீட்டுக்கு சென்று சீட்டு ஏலம் விடவேண்டும் என்றும் தனக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கேட்டுள்ளார். 

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தேவி மற்றும் கவிதாவைத் தாக்கிய சுந்தரம் அருகில் உள்ள இரும்பு ராடால் தனசேகரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தனசேகரன் மண்டை உடைந்தது. மேலும் அவரது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. 

இதனையடுத்து படுகாயமடைந்த தனசேகரன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த பாப்பாரப்பட்டி போலீசார் தலைமறைவான சுந்தரத்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.

No comments

Thank you for your comments