தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை சங்கம் சார்பில் நலத்திட்டங்கள்..
விருத்தாசலம்
விருத்தாசலத்தில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில பொறுப்புத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் நல வாரியம் அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயல்படக்கூடிய தமிழக அரசு ஏற்கனவே உள்ள நல வாரியத்தை மாற்றம் செய்து அமைப்பு சாரா ஓட்டுநர்கள் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் தொழிலாளர்கள் நல வாரியம் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு மேலும் வாரியத்தில் இணைந்த தொழிலாளர்கள் விபத்தின் மூலம் மரணம் ஏற்பட்டால் இழப்பீடாக 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் அவர்களுக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கொரோனா நோயினால் உயிரிழந்த இருசக்கர வாகன பழுது நீக்குவோர் குடும்பங்களுக்கு சங்கத்தின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதில் மாநில பொதுச் செயலாளர் குமரவேலு, மாநில பொருளாளர் ஜமால் முகமது, மாநில தலைவர் அறிவழகன், மாநில துணை செயலாளர் கோபி, பயிற்சி ஆசான் மாநில ஆலோசகர் அகமது, மாநில ஆலோசகர் மனோகரன், கர்நாடகா மாநிலத் தலைவர் பிரசன்னகுமார் கௌடா, கர்நாடகா மாநில பொதுச் செயலாளர் பாஸ்கரன், நாயுடு மாநில துணைச்செயலாளர் ஈரோடு இதயத்துல்லா பாபு, பல்லடம் நாகராஜ், சென்னை விஸ்வநாதன், மாநில செய்தி தொடர்பாளர் சம்பத் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நலசங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments