கழுதூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கழுதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3வது மெகா கொரோனா நோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.
முகாமினை கல்லூரி இயக்குநர் வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.விவேக் முற்றும் அவர் தலைமையிலான மருத்துவர்கள் கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு மற்றும் கிராம பொது மக்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கொரோனோ நோய் பற்றிய விழிப்புணர்வும் ,அது பரவும் முறை பற்றியும், தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் சுகாதார ஆய்வாளர் தேவகிருஷ்ணன் ,கல்லூரி முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments