காவல் துறையினர் சார்பில் திருட்டு மற்றும் குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு...
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் காவல் துறையினர் சார்பில் திருட்டு மற்றும் குற்றங்களைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு.ஏ.ஜி.பாபு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் ஆகியோரின் உத்தரவின் பேரில் குடியாத்தம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராமமூர்த்தி மேற்பார்வையில் கே.வி குப்பம் காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் கே.வி குப்பம் பேருந்து நிலையம், காய்கறி சந்தை, உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று திருட்டு மற்றும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பிரசுரங்களை வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது.



No comments
Thank you for your comments