Breaking News

நிர்வாண பூஜைக்கு தயாராகும் போலி சாமியார்... அரசு தடுக்குமா...?

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் உள்ள புத்தகரத்தில் சிவயோகி என்கிற சிவகுமார் (போலி சாமியார்) யோககுடில் ஒன்று நடத்தி வருகிறார். 

இதில் ஞாயிற்று கிழமைதோறும் அனைத்து மகான்களையும், இந்து, கிறிஸ்டின், முஸ்லீம் என அனைத்து மதங்களையும் தொடர்ந்து தனது சிவயோகி என்கிற யூ டியூப் சேனலில் கீழ்த்தரமாக பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இவரிடம் ஆண்கள் உபதேசம் பெறுவதற்கு ரூ.50,000 வசூல் செய்து வருவதாக இவரது சீடர்கள் கூறுகின்றனர். பணம் இல்லாதவர்கள் அவர்களது மனைவியை அல்லது சிறு பெண் குழந்தைகளை அழைத்து வந்து விடணுமாம். பெண்களுக்கு கட்டணம் கிடையாதாம், இரவில் வந்து வேலை செய்ய வேண்டுமாம், வேலை முடிந்தவுடன் இரவு கூலியாக இவர் அவர்களுக்கு பணம் கொடுப்பாராம். 

ராஜாராம் என்பவர் இவரிடம் ரூ.50,000 கொடுத்து பின்னர் இவரது நடத்தை சரி இல்லை என தெரிந்ததும், திரும்ப கேட்டதற்கு அடி ஆட்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இவரின் பேச்சு  சிறப்பு என்னவென்றால் தற்போது இருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை என் ஞானத்தால் தான் முதலமைச்சர் ஆக்கினேன் என ஞாயிற்று கிழமைதோறும் இவரை பார்க்க வரும் அனைவரிடமும் கூறிவருவதை வழக்கமாக வைத்துள்ளாராம். 

இவர் திருசிற்றம்பலத்தையும், சிவபெருமானையும் கீழ்த்தரமாக பேசி வெளியிட்ட வீடியோவால்  3.2.2021 அன்று புழல் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தற்போது மெய்வழி மதத்தையும் வள்ளலார் அமைப்பையும் கீழ்த்தரமாக பேசி வருகிறார். மெய்வழி மதத்தினர் திருவள்ளூர் மற்றும் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒன்று சேர்ந்து புகார் கொடுத்துள்ளனர். 

இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க வல்லரசு என்ற கட்சியை தொடங்கியுள்ளார் போலி சாமியார் சிவகுமார். இந்த ஆட்சி சரியில்லை அடுத்த முதல்வர் நான் தான் என்று தன் சீடர்கள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களிடையே கூறி வருகிறாராம். 

இவரது அடுத்த பூஜை கன்னி கழியாத சிறுமியை வைத்து நிர்வாண பூஜையாம். அதற்கு காஞ்சிபுரத்தில் இடம் தேடி வருகிறாராம். இவர் போன்ற போலி சாமியார்களை விசாரணை செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

4 comments:

  1. முற்றிலும் தவறான செய்தி.. சிவயோகி ஐயா ஒரு உண்மையாக மனிதர்.. மனிதர்களை மதிப்புடன் நடத்தும் பண்பாளர். YouTube ல் போலி மனிதர்களை சாடியுள்ளார். இயேசு புத்தர் திருவள்ளுவர் சிவவாக்கியர் தாயுமானவர் திருமூலர் போன்றோர் இறைவனை பற்றி

    ReplyDelete
    Replies
    1. திருசிற்றம்பலத்தையும், சிவபெருமானையும் இவர் பேசிய கொச்சை வார்த்தையை கேளுங்கள் முதலில், புழல் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து இனி இப்படி பேச மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார் இந்த போலி சாமியார், மீண்டும் சிறைக்கு செல்லும் நாள் மிக விரைவில்....

      Delete
  2. உண்மையான மனிதரின் ‌‌மீது போலி குற்றம்..
    இந்த போலி செய்தியினை‌ போட்டவர் சிவயோகி ஐயாவை ஒரு‌முறை சந்தித்தால் உண்மை விளங்கும். தவறுக்காக தவறான‌செய்தி வெளியிட்டவர் வருந்துவார்

    ReplyDelete
    Replies
    1. உண்மையான சாமியார் மற்ற மகான்களை தவறாக பேசுவதில்லை, கொச்சை வார்த்தை பேசும் இவர் ஒரு மனிதர், இவரை பின் தொடரும் மனிதர்களை என்ன சொல்வது?.....

      Delete

Thank you for your comments