ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு மாட்டிய நிலையில் மரணம்... கொலையா...? தற்கொலையா...? போலீசார் தீவிர விசாரணை
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ப.எடகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ். இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிய வருகிறது.
கடந்த 15-நாட்களுக்கு முன்பு மது பழக்கம் மறப்பதற்காக அருகில் உள்ள கோவிலில் மந்திரித்து பாக்கியராஜ் கையில் கயிறு கட்டியதாக கூறப்படுகிறது.
கயிறு கட்டியபோது அவரது மனைவி பாக்கியலட்சுமி இனிமேலும் நீ மது அருந்திவிட்டு வீட்டிற்க்கு வந்தால் நானும் எனது பிள்ளைகளும் தூக்குமாட்டி செத்துடுவோம் என்று கூறி கோயிலில் சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் மீண்டும் பாக்யராஜ் இன்று காலையிலேயே மருந்து மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி பாக்கியலட்சுமி கணவரிடம் ஏன் குடித்து விட்டு வந்தாய் என்று கூறி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாக்கியலட்சுமி சாமியிடம் சத்தியம் செய்தது போன்று பாக்கியலட்சுமி அவரது மகள் திவ்யா (வயது-17) திவாகர் (வயது-15) மூன்று பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் காவல்துறைக்கு புகார் கொடுத்ததின் பேரில் ஆலடி போலீசார் விரைந்து சென்று கொலையா...? தற்கொலையா...? என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்பு பிரேதத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மகன் மூவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ...அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
தலைவன் தறிகெட்டால் தடுமாறும் குடும்பம் அழிந்துவிடும் என்பதற்கு இச்சம்பவமே சான்று...
எந்த தவறும் செய்யாது விளையாட்டு பருவத்தில்... மலர்ந்தும் மலராது இரண்டு மொட்டுகளும் இங்கே வாடி உதிர்ந்துவிட்டன.. காலத்தின் கொடுமை...
இச்சம்பத்தால் இதுபோன்றோர் இனியாவது திருந்தவேண்டும்...
No comments
Thank you for your comments