பொதுமக்கள் மத்தியில் அரசியல் பிரமுகர் வெட்டி படுகொலை... விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை... இருவர் கைது
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் வசீம் அக்ரம். இவர் மனித நேய ஜனநாயக கட்சியில் முன்னாள் மாநில துணை செயலாளராக பதவி வகித்தவர். தற்போது சமூக ஆர்வலராகவும் வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
![]() |
வசீம் அக்ரம் |
இந்நிலையில் வசீம் அக்ரம் ஜீவா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு தனது ஏழுவயது மகன் உடன் தொழுகைக்கு சென்று தொழுகை முடித்து விட்டு வீட்டு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்து சுமார் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை தாக்க தொடங்கியது. இதனால் மகனை விட்டுவிட்டு அங்கு இருந்து தப்பி ஓடியுள்ளார்.
அவரை துரத்திய 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டி சாய்த்தனர். பின்னர் குற்றவாளிகள் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி பதிவானது.
தகவலின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டவரின் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேலூர் எஸ்பி செல்வகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். கொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமென, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாணியம்பாடி பேருந்து நிலை மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் முடப்பட்டன... பதட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி பாபு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.பின்னர் சிசிடிவி காட்சிகளின் பேரில் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது போலீஸார் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.
அப்போது வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, வண்டலூர் பகுதியை சேர்ந்த டில்லி குமார் ஆகிய இருவர் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, கடந்த 26.7.2021ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள டீல் இந்தியாஸ் என்பவர் கிடங்கில் 10 பட்டா கத்தி, 8 கிலோ கஞ்சா மற்றும் 3 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனை போலீசாருக்கு காட்டி கொடுத்ததால் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர்கள் வந்த கார் மற்றும் காரில் இருந்த 10 பட்டா கத்திகள் பறிமுதல் செய்து தப்பி ஓடிய கார் ஒட்டுணர் உட்பட 5 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மகன் கண் எதிரிலேயே தந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments