Breaking News

பாரதியார் நூலகத்தில் மகாகவி நினைவு நாளையொட்டி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல் பாளையத்தில் உள்ள பாரதியார் நூலகத்தில் இன்று (11.09.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 100-வது நினைவு நாளையொட்டி, பாரதியாரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் 11.12.1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சுப்பிரமணிய அய்யா மற்றும் இலக்குமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். 1901-ம் ஆண்டு கருங்கல் பாளையம் வாசிப்பு அறை தொடங்கப்பட்டது. கே.எஸ்.தங்கப்பெருமாலு உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் பாரதியாருக்கு அறிமுகமானார். சிறிது குணடைந்த பிறகுஅந்த இளம் வழக்குறிஞர் பாரதியாரை ஈரோட்டுக்கு வருமாறு கோரினார். அவரின்ன் கோரிக்கையை ஏற்று சுப்பிரமணிய பாரதியார் 31.07.1921 அன்று ஈரோடு கருங்கல்பாளையம் வாசிப்பு அறைக்கு வருகைதந்தார்.

அங்கு அவர் “மனிதன் அழியாதவன்” MAN IS IMMORTAL” என்ற தலைப்பில் உரையாற்றினார். இது அவரின் கடைசி உரையாகும். இதுவே இந்நூலகத்திற்கு பாரதியார் நூலகம் எனபெயர்ப்பட காரணமானது. 

சுப்பிரமணிய பாரதியார் 11.09.1921 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 03.03.1978 முதல் கருங்கல் பாயையம் நூலகம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்நூலகம் அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, ரூ.23 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பாரதியாரின் பிரத்யேக புகைப்படங்களுடன் கூடிய நினைவு நூலகமாக மாறியது. மேலும் 2009-ம் ஆண்டு பாரதியார்  சிலை திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார்  அவர்களின் 100வது நினைவு நாளையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவிமரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட நூலக அலுவலர் வி.மாதேஸ்வரன் உடனிருந்தார்.


No comments

Thank you for your comments