இளம்பெண் பாலியல் படுகொலை...அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி
புதுடெல்லியில் காவல் அதிகாரியான இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுடெல்லியில் காவலதிகாரி இளம்பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை நல குழு சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சிறுபான்மை நல குழு தர்மபுரி மாவட்ட செயலாளர் ஜேசுதாஸ் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸா மேரி, மாவட்ட தலைவர் யாஸ்மின், துணைத்தலைவர் அர்ஜுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜெயா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து சிசுபாலன் ராமச்சந்திரன் விஸ்வநாதன், நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் கந்தசாமி மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments