திமுக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் திமுக ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் திருமண மாளிகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலளர் க.சுந்தர் MLA தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விவல் தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வேட்பாளர்கள்- ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் வேட்பாளர்கள்-ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள்-கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?



No comments
Thank you for your comments