Breaking News

பேருந்து நிறுத்தத்தில் மழை நீர் தேங்கி நிற்கும் அவலம்!

 விழுப்புரம் : 

பேருந்து நிறுத்தத்தில் தேங்கிய மழை நீர், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும் அவதி...

தமிழகத்தில்  வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. 

அதுபோல், விழுப்புரத்திலும் கடந்த சில தினங்கலாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி எடுப்பதும், அதற்கு மாறாக  மாலை, இரவு வேளைகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழை விடிய விடிய இடை விடாமல் கொட்டித் தீர்த்தது.  

இதேபோன்று, விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், வளவனூர், காணை, நன்னாடு, தோகைப்பாடி, சிந்தாமணி, அய்யூர் அகரம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் மணம்பூண்டி, செஞ்சி, திண்டிவனம், வானூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் இடி- மின்னலுடன் மழை பெய்தது.

இதனால் விழுப்புரத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் பல பகுதி சாலைகளிலும், பேருந்து நிறுத்தத்திலும்  தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள்  மகிழ்ச்சியாக இருந்தாலும், பேருந்து நிறுத்தத்தில் இதுபோன்ற மழைநீர் தேங்குவதால் அவ்வழியே  செல்வோர் அச்சத்தில் நடந்த செல்கின்றனர். தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பேருந்து நிற்கும் இடத்தில் கழிவுநீர் தூர்வாரப்பட்டும், மறுபடியும் மழைநீர் தேங்குகிறது. அதில் கழிவு அடைப்பு ஏற்பட்டுள்ளதை தூர்வாரப்படவேண்டும்... தண்ணீர் சீராக செல்லும்படியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments