Breaking News

பெண்களிடம் சில்மிஷம்.... இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்... தரமான சம்பவம்...

போச்சம்பள்ளி அருகே வாகனத்தில் சென்ற பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர்களை புள்ளிங்கோ இளைஞர்களை பிடித்து, மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், பொன்னேரி, சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்(வயது 35).  இவர் தனது உறவினர்களுடன்  வாகனத்தில், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர், வெதரம்பட்டியில் உள்ள தனது உறவினரான ரம்யாவின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு  சென்று விட்டு, மாலை 6:00 மணியளவில் தர்மபுரி–திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் , களர்பதி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இருமத்தூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடிவிட்டு ஃபுல் கட்டு கட்டிய புள்ளிங்கோ நண்பர்கள் 7 பேர் மது அருந்திவிட்டு காரில் வந்தனர். 

அப்போது, அந்த வழியில் சென்றுகொண்டிருந்த மணிகண்டன்  உறவினர்களின் வாகனத்தை  பின்தொடர்ந்து பெண்களை கிண்டலும் கேலி செய்து வந்தனர் அந்த குடிமகன் இளைஞர்கள்...

ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில்,  பெண்கள் பயணித்த வாகனத்திற்கு முன்னும் பின்னும் துரத்தி ஓட்டுநரை கோபமடைய செய்துள்ளனர்.

பிறகு கலர்பதி பகுதியில் வாகனத்தை குறுக்கே விட்டு டிரைவர் மற்றும் அதில் உள்ள பெண்களையும்  தாக்கியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு  சுற்றுப்புறத்தில் இருந்த வந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இவரோடு வந்த நான்கு நண்பர்கள் இவர்களை பாதியிலேயே கழட்டி விட்டுவிட்டு காரை எடுத்துச் சென்று ஓடிவிட்டனர். மூன்று பேரை பிடித்து மரத்தில் கட்டி தர்மஅடி கொடுத்தனர். 



அந்த வழியாக சென்ற போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார்  விசாரணை மேற்கொண்டதில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர், சு.பள்ளிப்பட்டைச் சேர்ந்த கௌதம்(20), கார்த்திக்(25), வல்லரசு(19) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நான்கு பேரையும் விசாரித்து வருகின்றனர்.

மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் இன்ஸ்பெக்டர் மக்களிடமிருந்து மூன்று பேரையும் காப்பாற்றியதால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

No comments

Thank you for your comments