ஊராட்சி மன்ற தலைவர்களுடன் டிஎஸ்பி கலந்தாய்வு கூட்டம்
கடலூர்
சிறுபாக்கம் தனியார் மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் டிஎஸ்பி சிவா கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோருடன் திட்டக்குடி டிஎஸ்பி சிவா தலைமையில் காவல்துறையினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வேப்பூர் தாலுக்கா, சிறுபாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து கிராமங்களிலும், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என டிஎஸ்பி சிவா கேட்டுக்கொண்டார்.
அவருடன் சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளர் கமல்ஹாசன், தனி பிரிவு தலைமை காவலர் ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments